அல்லாஹ்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[96:1] படிப்பீராக, படைத்த, உம்முடைய இரட்சகரின் பெயரால்.*
[10:57]
மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இதிலே
ஞான உபதேசமும், மேலும் உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்த ஒன்றிற்கும் நிவாரணமும், மேலும் வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர் களுக்குக் கருணையும் வந்துள்ளது.
குர் ஆன்: மீட்சிக்காக உங்கள் அனைவருக்கும் அவசியமானது
19:64 ல் பேசுகின்ற குர்ஆனின் வார்த்தைகள், “நாங்கள் உம்முடைய இரட்சகரின் கட்டளைகளுக்கு
இணங்க இறங்கி வருகின்றோம். கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர் காலம்
அவருக்கே உரியது. உம்முடைய இரட்சகர் ஒரு போதும் மறப்பதில்லை” என்று கூறுகின்றது. அல்லாஹ்
மறந்துவிடவில்லை, உதாரணத்திற்கு, எவ்வாறு உறங்க வேண்டும் என்று நமக்குக்
கூறுவது (18:109, 31:27). இருப்பினும் ஹதீஸ் & சுன்னத் போன்ற இத்தகைய பொய்யான
போதனைகளை இட்டுக் கட்டுபவர்கள், தங்களை பின்பற்றுபவர்களுக்கு
எவ்வாறு உறங்குவது
மேலும் எவ்வாறு உங்கள் நகங்களை வெட்ட வேண்டும் என்பதைக் கூட மார்க்க உபதேசங்களாகக்
கொண்டு உத்தரவிட்டு வருகின்றனர். புனிதப் பள்ளியான மக்காவிலும் மேலும்
சட்ட விரோதமான “புனிதப்
பள்ளியான” மதீனாவிலும்
களைப்படைந்தவர்களாக வருகை புரிபவர்களைத் தேடிக் கண்டு
பிடித்து மேலும் அவர்கள் தவறான பக்கம் படுத்து உறங்கினால் அவர்களை
குச்சியால் அடிப்பதற்காக சில தனி நபர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர்!
[59:21]
இந்தக்
குர்ஆனை ஒரு மலையின் மீது நாம்
வெளிப்படுத்தியிருப்போமாயின் அல்லாஹ் - ன்
மீதுள்ள அச்சத்தால் அது நடுநடுங்கி பொடிப் பொடியாகி இருப்பதை
நீர் கண்டிருப்பீர், அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக, இத்தகைய உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.
குர்ஆன்:
நமக்குத் தேவையான அனைத்தும்
[18:109]
“பெருங்கடலே
என் இரட்சகரின் வார்த்தை களுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்துபோகும்
முன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், மையை நாம் இருமடங்கு வழங்கினாலும் சரியே” என்று கூறுவீராக.
நமக்குத்
தேவையான வார்த்தைகள்
எல்லாம் இவைதான்
எல்லாம் இவைதான்
[31:27]
பூமியின்
மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல்களாக ஆக்கப்பட்டாலும், மேலும் பெருங்கடல் மையை வழங்கினாலும், இன்னும் அது ஏழு பெருங்கடல்கள் கொண்டு அதிகரிக்கப் பட்டாலும், அல்லாஹ்-ன் வார்த்தைகள் தீர்ந்து போய்விடாது. அல்லாஹ் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
குர்ஆன் முழுமையானது, மிகவும் சரியானது, மற்றும் முழுவதும் விவரிக்கப்பட்டது (6:19, 38, 114, 115; 50:45) மேலும் குர்ஆனில் குறிப்பிட்டு ஏற்படுத்தப்படாத மார்க்கச் சட்டங்கள், இஸ்லாம் அதாவது அடிபணிதல் (42:21, 17:46) அல்லாத வேறொரு மார்க்கத்தை உண்டாக்குகின்றன என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது. உண்மையான நம்பிக்கையாளர்கள் குர்ஆனை, முழுகுர்ஆனை வேறெதையும் அல்லாது குர்ஆனை மட்டும் உறுதியாகக் கடைபிடிப்பார்கள். இந்த அடிப்படைக் கொள்கை குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் குர்ஆனை மட்டுமே உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று சூரா 17ன் 46வது வசனம் பிரகடனம் செய்கின்றது. “மட்டும்” என்கிற வார்த்தை குர்ஆனில் 6 முறை வருகின்றது : 7:70, 17:46, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4. இவற்றில் 17:46ஐத் தவிர மற்ற அனைத்தும் “அல்லாஹ்ஹுவைக்” குறிக்கின்றது. “அல்லாஹ் மட்டும்” என்று குறிப்பிடுகின்ற சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டும்போது, நாம் பெறுவது 361, 19 X19. இது 17:46 “குர்ஆன் மட்டும்” என குறிப்பிடுகின்றது என்பதை நிரூபிக்கின்றது.
[7:2] இவ்வேதம் உமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது- உம்முடைய
இதயத்தில் இது பற்றிய சந்தேகத்திற்கு நீர் இடமளிக்க வேண்டாம் - இதனைக் கொண்டு நீர்
எச்சரிக்கை செய்யும் பொருட்டும், மேலும் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு
நினைவூட்டல் வழங்கும் பொருட்டும்.
[2:38] நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து கீழே செல்லுங்கள். என்னிடமிருந்து வழிகாட்டல்
உங்களுக்கு வரும்போது என்னுடைய வழி காட்டலைப் பின்பற்றுவோருக்கு அச்சம் எதுவும்
இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
குர்ஆன்: வேறு எந்தப் புத்கத்தையும் போன்றதல்ல
குர்ஆன்
உலகிற்கு அல்லாஹ்-ன் இறுதி ஏற்பாடு ஆகும், மேலும் மிகச் சிறிய சிதைவுகளிலிருந்தும்
இதனைப் பாதுகாப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். (15:9). இதன் விளைவாக, அதற்கு காவலாகவும் மேலும்
அதற்குப் பணியாற்றவும், கண்களுக்குத் தெரியாத
படைகளால் குர்ஆன் சூழப்பட்டுள்ளது (13:39, 41:42, 42:24).
குர்ஆன், முழுக்குர்ஆன், மேலும்
குர்ஆனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை
குர்ஆனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை
[6:19]
“யாருடைய
சாட்சியம் மிகப்பெரியது?” என்று கூறுவீராக. “அல்லாஹ்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன்* உங்களுக்கும்
மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும்
உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார். நிச்சயமாக, அல்லாஹ்-ஐத் தவிர வேறு தெய்வங்கள்* இருப்பதாக
நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி
கூறமாட்டேன், ஒரே ஒரு அல்லாஹ் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைவைப்பைக் கைவிட்டு
விட்டேன்” என்று கூறுவீராக.
குர்ஆன்:
முழுவதும் விவரிக்கப்பட்டது*
[6:114]
அவர் இந்த
புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப் பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது, அல்லாஹ் -ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக
நான் தேடுவேனா?* வேதத்தைப் பெற்றவர்கள் இது உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் வெளிப் படுத்தப்பட்டது என்பதை அறிந்துக்
கொள்வார்கள். நீர் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.
[6:115]
உங்கள்
இரட்சகருடைய வார்த்தை சத்தியத் தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது.* அவருடைய வார்த்தைகளை, எதுவும் மாற்ற முடியாது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
குர்ஆன்:
ஒரே மார்க்க ஆதாரம்
[17:46]
அவர்கள்
அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து
விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.
வேறு எந்தப் புத்தகத்தையும் போன்றல்லாது குர்ஆனானது அல்லாஹ்-ஆல் கற்பிக்கப்படுகின்றது (55:1-2). அவர் நமக்குத் தேவையானதை அது நமக்குத் தேவைப்படும் நேரத்தில் கற்றுக் கொடுக்கின்றார். இதனால் தான் சலிப்பு அடையாமல் பலநூறு தடவைகள் குர்ஆனை நாம் படிக்கின்றோம். உதாரணத்திற்கு, ஒரு நாவலை நாம் ஒரே ஒரு தடவை படிக்கலாம். ஆனால் குர்ஆனை எண்ணற்ற தடவைகள் படிக்கவும் மேலும் நாம் புதிய மற்றும் பெரும் மதிப்பு வாய்ந்த தகவல்களை அதிலிருந்து ஒவ்வொரு முறையும் பெறவும் முடியும். அவ்வாறின்றி - குர்ஆனைக் கொண்டு குறை கண்டு பிடிப்பதற்காக படிக்கின்ற - வஞ்சகமான வாசிப்பாளர்கள் குர்ஆனிலிருந்து வேறு பாதையில் திருப்பப்பட்டு விடுகின்றார்கள் (7:146, 17:45, 18:57, 41:44). உண்மையில், அவர்கள் தேடுகின்ற குறைகளை காண்பதற்கு, கண்ணுக்குத் தெரியாத அல்லாஹ்ஹுவை ளின் படைகள் அவர்களுக்கு உதவுகின்றன. மிகச் சரியானதாக குர்ஆன் இருப்பதால் இத்தகைய “குறைகள்” அல்லாஹ்-டைய எதிரிகளின் முட்டாள் - தனத்தை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன.
அல்லாஹ் குர்ஆனை விவரிப்பதற்கு தன்னுடைய சொந்த அடைமொழிகளைப் பயன்படுத்துகின்றார் : அவர் குர்ஆனை “அஜீம் = மகத்தானது” (15:87), “ஹக்கீம் = ஞானம் நிறைந்தது” (36:2) “மஜித் = ஒளிமயமானது” மேலும் “கறீம் = கண்ணியமானது” (56:77) என்று அழைக்கின்றார். நாம் என்ன கூற முடியும்?
குர்ஆன்: முற்றிலும் விவரிக்கப்பட்டது
[7:52] நாம் முற்றிலும் விவரிக்கப்பட்டதும், அறிவும், வழிகாட்டலும் கொண்டதும், மேலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு
கருணையுமான வேதத் தை அவர்களுக்கு வழங்கினோம்.
மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய மொழிகளுக்கு அப்பாற்பட்ட அல்லாஹ்-ன் செய்தியாக குர்ஆன் இருப்பதால், அவர்களுடைய மொழிகளைப் பொருட் படுத்தாது நம்பிக்கையாளர்களை அடையக் கூடியதாக குர்ஆன் உள்ளது (41:44). இது ஆழ்ந்ததோர் அற்புதத்தை விளக்குகின்றது: அரபி மொழி தெரியாத நம்பிக்கையாளர்கள், அரபி மொழி பேசுகின்ற நம்பிக்கையற்றவர்களைக் காட்டிலும் குர்ஆனை நன்கு தெரிந்திருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாத படைகள் குர்ஆனுக்கு பணிபுரிகின்ற காரணத்தால் உண்மையான நம்பிக்கையாளர்கள் உடனடியாகவும், மகிழ்ச்சியுடனும் அடையக் கூடியதாகவும், மேலும் நம்பிக்கையற்றவர்கள் முற்றிலும் அடைய முடியாததாகவும் இது உள்ளது (17:45, 18:57, 56:79).
தெய்வீகத்
தலையீடு நம்பமறுப்பவர்களை
இருளில் வைக்கின்றது
இருளில் வைக்கின்றது
[7:146]
நியாயமின்றி, பூமியின் மீது கர்வமோடிருப் பவர்களை என்னுடைய வெளிப்பாடுகளி லிருந்தும் நான்
திருப்பிவிடுவேன். அதன் விளைவாக, எல்லா வகையான சான்றை பார்த்த போதும் அவர்கள் நம்பிக்கை
கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் வழிகாட்டலைக் கொண்ட பாதையைப் பார்க்கும் போது
அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், ஆனால் அவர்கள் வழி தவறிய பாதையைக் காணும்
போது, அவர்கள் அதனை அவர்களுடைய பாதையாக ஏற்றுக்கொள்வார்கள்.
இது நம்முடைய சான்றுகளை அவர்கள் நிராகரித்து, மேலும் முழுவதுமாக அதன் மீது கவனமற்றவர்களாக
இருப்பதன் விளைவாகும்.
நம்ப
மறுப்பவர்கள் குர்ஆனைப்
புரிந்து கொள்ள முடியாது
புரிந்து கொள்ள முடியாது
[17:45]
நீர் குர்ஆனை
படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளா தோருக்கும் இடையில்
காணமுடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.
தெய்வீகத்
தலையீடு
[18:57]
தங்கள்
இரட்சகரின் சான்றுகளால் நினைவூட்டப்பட்டு, பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து
கொள்ளாது, அவற்றைப் புறக்கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்காக அவர் களுடைய
இதயங்களின் மீது கவசங்களையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும்
நாம் அமைத்து விடுகின்றோம். இதனால், அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன
செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்திலும் வழி
நடத்தப்படமாட்டார்கள்.
மொழி ஒரு
பொருட்டல்ல
[41:44]
அரபி மொழி
அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள். அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ, “நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும் மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப
மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவி லிருந்து
சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர் களாகவும்
இருப்பார்கள்” என்று கூறுவீராக.
No comments:
Post a Comment