Thursday, May 2, 2013

அல்லாஹ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம்


[3:19] அல்லாஹ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் "அடிபணிதல்" ஆகும்...
[3:85] எவர் ஒருவர் அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக ஏற்றுக் கொள்கின்றாரோ அது அவரிடமிருந்து ஏற்று கொள்ளப்படமாட்டாது, இன்னும் மறுவுலகில் அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார்.

 

இஸ்லாத்தின் முதல் தூண் (அடிபணிதல்):

"லா இலாஹா இல்லல்லாஹ்"(அல்லாஹுவை த்தவிர அல்லாஹ் இல்லை)

 

வசனம் 3:18 (அடிபணிதல்) இஸ்லாத்தின் முதல் தூணை எடுத்துரைக்கின்றது. அவரைத் தவிர வேறு அல்லாஹ் இல்லை என்று அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றார், அவ்வாறே வானவர்களும், அறிவைப் பெற்றிருப்போரும் செய்கின்றனர்.

 

மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தூணானது சிதைக்கப்பட்டுவிட்டது. கோடிக் கணக்கான முஸ்லிம்கள், சாத்தானுடைய பலதெய்வக் கொள்கையின் வடிவத்தை சுவீகரித்துக் கொண்டு, அல்லாஹ்வின்  பெயருடன் முஹம்மதின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். ஆயினும், 39:45 ல் கூறப்பட்டுள்ள குர்ஆனின் மாபெரும் அடிப்படை அளவுகோல், இத்தகைய முஸ்லிம்களை நம்ப மறுப்பவர்கள் என்று முத்திரையிடுகின்றது: அல்லாஹ் மட்டும் தனித்துக் குறிப்பிடப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கிவிடுகின்றன, ஆனால் அவருடன் மற்றவர்கள் குறிப்பிடப்பட்டால், அவர்கள் திருப்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்”.

 

இந்த அடிப்படை அளவுகோலின் மீது நான் விரிவான ஆய்வு நடத்தி, ஒரு திடுக்கிடும் தீர்மானத்தை எட்டி உள்ளேன்; 3:18ல் எடுத்துக் கூறப்பட்டுள்ள, இஸ்லாத்தின் முதல் தூணை ஆதரிக்காத இணைவைப்பாளர்கள், சரியான ஷஹாதத்தை உச்சரிப்பதை விட்டும் அல்லாஹ்-ஆல்  தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களால் முஹம்மதுடைய பெயரைக் குறிப்பிடாமல் தனியாக அஷ்-ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ்என்று மட்டும் கூறவே முடியாது. தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்ளும் எந்த ஒரு இணைவைப்பாளரிடமும் இதனை முயன்று பாருங்கள், அவர்களிடம்: அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்என்று கூறும்படி அறைகூவல் விடுங்கள், அவர்களால் ஒருபோதும் இதனை கூறவே இயலாது. இது ஆப்ரஹாமின் மார்க்கமாக இருப்பதால் (2:130, 135; 3:95; 4:125; 6:161, 12:37 - 38; 16:123; 22:78;, “லா இலாஹ இல்லல்லாஹ் (ஒரே அல்லாஹுவை த் தவிர வேறு அல்லாஹ் இல்லை) என்பது மட்டுமே ஒரே மார்க்க நம்பிக்கையாக இருக்க வேண்டும். பூமியில் ஆப்ரஹாமிற்கு முன்னால் முஹம்மது உயிர் வாழ்ந்திருக்கவில்லை.

 

ஒரு மாபெரும் இறை நிந்தனை

 

முஹம்மது நபியின் விருப்பத்திற்கு எதிராக, அவரை, இணைவைத்து வழிபடுவதற்காகக் குர்ஆனைச்

சிதைத்துத் திரித்துக் கூறுவதை விட மாபெரும் இறைநிந்தனை எதுவுமில்லை. அத்தியாயம் முஹம்மத்

வசனம் 19 (47:19) “ஒரே அல்லாஹுவை த் தவிர வேறு அல்லாஹ் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்

என்று கூறுகின்றது. கீழே காட்டப்பட்டிருப்பது, த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் (சமயங்கள் குறித்த ஒரு திறனாய்வு)

என்ற முஸ்லிம் பிரசுரத்தின், வழமையான அடையாளச் சொல் முத்திரையின் புகைப்பட நகல் ஆகும்.

(லண்டன் மசூதி, 16, க்ரெஸ்ஸன்ஹால் சாலை, லண்டன் ளுறு185ணுடு, இங்கிலாந்து) த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் ன்

வெளியீட்டாளர்கள், குர்ஆனின் அழகிய எழுத்து முறையைப் பயன்படுத்தி, “முஹம்மது ரசூலுல்லாஹ்”, என்ற வாசகத்தைச் சேர்த்து 47:19ல் கூறப்பட்டுள்ள குர்ஆன் வாசகம் அதுதான் என்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எத்தகையதொரு இறைநிந்தனை!

 

அல்லாஹ் என்ற அந்த ஒரு அல்லாஹுவை த் தவிர வேறு அல்லாஹ் எதுவுமில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; முஹம்மது அல்லாஹ்வின்  ஒரு தூதர் ஆவார்.

(அந்த இறைநிந்தனை)

சிதைக்கப்பட்ட இஸ்லாத்தை எடுத்துக்காட்டும் ஓர் உதாரணம்

 

அடிப்பணிந்தோர் அனைவரின் ஒற்றுமை

[2:62] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும், யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும், மேலும் மாறியவர்களும், எவர் ஒருவர்
(1)
அல்லாஹ் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (2) இறுதி நாளின் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

[16:51] அல்லாஹ்:இரண்டு தெய்வங்களை வழிபடா தீர்கள்; இருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. நீங்கள் என்னிடம் மட்டுமே பயபக்தியோடு இருக்க வேண்டும்என்று பிரகடனம் செய்துள்ளார்.

[16:52] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது, ஆகையால் மார்க்கம் முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். அல்லாஹ்-ஐத் தவிர மற்றொன்றை வழிபடுவீர்களா?

[3:102] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ் -க்கு எவ்வாறு அஞ்சவேண்டுமோ, அவ்வாறு அஞ்ச வேண்டும். மேலும் அடிபணிந்தவர் களாகவே அன்றி மரணிக்காதீர்கள்.

நம்பிக்கையாளர்கள் ஒற்றுமையாக
இருப்பார்கள்

நீங்கள் அல்லாஹ்-ன் கயிற்றை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும், நீங்கள் அனை வருமாக, மேலும் நீங்கள் பிளவுபட்டிருக் காதீர்கள். உங்கள் மீது அல்லாஹ்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள் - நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள் மேலும் அவர் உங்கள் இதயங்களை ஒன்று சேர்த்தார். அவரது அருளால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக் குழியின் விளிம்பில் இருந்தீர்கள், மேலும் அங்கிருந்து உங்களை அவர் காப்பாற்றினார். இவ்விதமாக தன் வெளிப்பாடுகளை, நீங்கள் வழி நடத்தப்படும் பொருட்டு அல்லாஹ் உங்களுக்கு விளக்குகின்றார்.

[39:2-3] சத்தியத்துடன், இந்த வேதத்தை உமக்கு நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்; அல்லாஹ்-க்கு மட்டுமே உங்கள் மார்க்கத்தை அர்ப்பணித்துக் கொண்டவர் களாக, நீங்கள் அவரை வழிபட வேண்டும். நிச்சயமாக, மார்க்கம் அல்லாஹ்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவேண்டும். அவருடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள், “அல்லாஹ்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைவழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின் றார்கள்!என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து அல்லாஹ் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்ப மறுப்பபவர்களைக் அல்லாஹ் வழிநடத்துவதில்லை.

மார்க்கம் சம்பந்தமாக பிரிவுகள் கண்டனம்செய்யப்படுகின்றது

[6:159] எவர்கள் தங்களையே பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கின்றனரோ அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய தீர்ப்பு அல்லாஹ்-இடம் இருக்கின்றது, பின்னர் அவர் கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். 160. எவரேனும் நன்னெறியானதொரு காரியம் செய்தால் பத்திற்கான வெகுமதியை பெறுகின்றார், மேலும் ஒருவர் ஒரு பாவம் செய்தால் அந்த பாவத்திற்குரிய கூலி மட்டுமே கொடுக்கப் படுகின்றார். ஒருவரும் சிறிதளவும் அநீதியை அனுபவிக்க மாட்டார்கள்.

மார்க்கம் ஒன்றே ஒன்று தான்

[42:13] நோவாவிற்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், மேலும் ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் இயேசுவிற்கும் விதித்ததுமாவது: இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்என்பதே.

ஏகத்துவவாதிகளும் இணைவழிபாடு செய்பவர்களும் எதிரி நிலையில்

அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் இணைவழிபாடு செய்பவர்கள் பெரும் கோபம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் அல்லாஹ் தன்பால் மீட்டுக் கொள்கின்றார்; முற்றிலும் அடிபணிந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.

No comments:

Post a Comment

var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner'; var adfly_advert = 'int'; var adfly_advert = 'banner';