அந்த காலத்தில....
தருமியின் இந்த பதிவையும் இதற்கு முந்தைய பதிவையும் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எல்லாம் இந்த கடவுள் சோதிடம் சம்பந்தப்பட்ட விசயங்கள்தான்.
தன்னால் விளக்கமுடியாத விஷயங்களை கடவுள் மேல் போட்டு பார்த்து மனித குலம் திருப்திப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன்
.இதைப்பற்றி விளக்கமாக எழுதும்முன் நான் ஒரு காலத்தில் திண்ணையில் ஒரு எதிர்வினை கொடுத்திருந்தேன்.அதைப்பற்றி இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்
.
சுட்டியை ஃபாலோ செய்தீர்கள் என்றால் கடவுளை பற்றி திருமதி.ஜோதிர்லதா கிரிஜா என்பவரின் கருத்தை சொல்லும்
.
சுட்டியை படித்தீர்கள் என்றால் அது ஹமீது என்பவரின் கருத்தை சொல்லும்.
நான் எழுதியது கிழ்கண்டவாறு (சுட்டி கொடுக்கப்படவில்லை )
-----------------------------------------------------------------------------
கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன்.எனக்கு தோன்றிய சில விசயங்கள்.
முதலில் நண்பர் ஜாபரின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொரிந்த காலம் முதல் கடவுள் விசயத்தில் இந்த வாதத்தை கேட்டு வருகிறேன். முதலில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பார்கள்.பிறகு மெல்ல மெல்ல நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பார்கள். இங்குதான் உள்ளது விசயம். அந்த சக்தி என்ன? அதன் பண்புகள் என்ன?
தெளிவான விளக்கம் கிடைக்காது. இயற்கை என்ற விசயத்திற்கும கடவுள் என்ற விசயத்திற்கும வித்தியாசம் உண்டு. இயற்கைக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன? கடவுளுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன? இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்? இரண்டின் பண்புகளும் ஒன்று என்கிறாரா நண்பர்?
மேலும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு புரியாமல் இருக்கும் சில விசயங்களைப் பற்றி கூறினார். என் கேள்வி என்னவென்றால் இயற்கையின் படைப்பில் நூறு வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு தெரியாத
விசயம் என்ன? இப்போது தெரியாத விசயம் என்ன? சிந்திக்க வேண்டும். வித்தியாசம் உண்டா இல்லையா?
தோழி கிரிஜாவின் கடிதத்தை பொருத்தவரை ஒன்றுதான் நாம் கூறமுடியும். திரு. சுப்ரமணியத்தின் அனுபவத்தை நம்பும் மக்களுக்கு உங்கள் அனுபவத்தை நம்புவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உங்கள் அனுபவத்தையும் நீங்கள் கூற வேண்டும். நாங்கள் படிக்க வேண்டும். பிள்ளையாரும் பால் குடித்து ரொம்ப நாள் ஆகிறது.
திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தெரிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான்.